பதிவு செய்த நாள்
26
மே
2012
10:05
ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவில், நமிநந்தி அடிகள் தினசரி தீபத் திருப்பணி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நீரால் விளக்கேற்றிய நமிநந்தி அடிகள், பெரிய புராணம் பாடிய தெய்வச் சேக்கிழார் குரு பூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீபப்பேரொளி இரண்டாம் ஆண்டு விழா, இன்று (மே 26) நடக்கிறது.அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, விநாயகர் மற்றும் கலச பூஜையும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், கைலாசநாதர், அறம் வளர்த்த நாயகி, சுப்ரமணியர், நந்தியம்பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மூலவர், நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார், சோமஸ்கந்தர் ஆகியோருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது.காலை 11 மணிக்கு, பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் கோவில் முழுவதும் அனைத்து சன்னதிகளிலும் திருவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள், நமிநந்தி அடிகள், தெய்வச்சேக்கிழார் ஆகிய ஸ்வாமிகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.