பதிவு செய்த நாள்
18
நவ
2020
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, வரும், 20ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முதல் வரும், 3 ம் தேதி வரை, நாளொன்றுக்கு, 5,000 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதில், 29ல் மஹா தீபத்தன்று, கோவிலினுள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், www.arunachaleswarartemple.tnhrce.in என்ற, கோவில் இணையதளத்தில், நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில், கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கேட்கும் விபரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம், நுழைவு சீட்டு பதிவு செய்பவர்களுக்கு, கோவில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது, 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே, கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படுவர். இவ்வாறு, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.