பதிவு செய்த நாள்
19
நவ
2020
05:11
வீரபாண்டி: சூரசம்ஹார விழாவையொட்டி, கரபுரநாதர் கோவிலில், சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அசுரனை அழித்து தேவர்களை காத்த சூரசம்ஹார விழா, அனைத்து முருகன் கோவில்களில் நடத்தப்படும். நடப்பாண்டு கொரோனாவால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அனைத்து உற்சவங்களும் விமரிசையாக கொண்டாடுவது ரத்து செய்யப்பட்டு, கோவில் பணியாளர், அர்ச்சகர் மட்டும் பங்கேற்று, ஆகம முறைப்படி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சூரசம்ஹார விழா கடந்த, 15ல் தொடங்கியது. தினமும் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு அபி?ஷகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதேநேரம், சூரசம்ஹாரம் நடத்தப்படவில்லை. மாறாக, வரும், 21ல், கோவில் பணியாளர், அர்ச்சகர் மட்டும் பங்கேற்று, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்.