பதிவு செய்த நாள்
19
நவ
2020
05:11
வெண்ணந்தூர்: பழமையான முத்துகுமாரசாமி கோவில் திருப்பணி, நாளை (நவ., 20), பூமி பூஜையுடன் துவங்குகிறது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில், முத்துகுமாரசாமி, பூபதி மாரியம்மன், பாவடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆடிமாதம் திருவிழா, ஐப்பசி மாதம், சூரசம்ஹார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பழமையானது. கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அதையடுத்து, கோவிலை புனரமைக்க, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதையடுத்து, கோவிலை இடிக்க, இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவில் இடிக்கப்பட்டது. மேலும், பாலாலய பூஜை செய்யப்பட்டு, மூலவர் சிலைகள், இடமாற்றி வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கோவில் புனரமைப்பு பணி, நாளை (நவ., 20), துவங்குகிறது. அதையடுத்து, அதிகாலை, 5:00 மணிக்கு, யாகம் நடத்தி, பூமி பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து, கோவில் திருப்பணி துவங்குகிறது. அதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.