பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
வீரபாண்டி: கந்தசஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த, 15ல் தொடங்கியது. நேற்று முன்தினம், சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று, முருகன் மரமாக நின்ற சூரனை இரண்டாக பிளந்து, சேவல், மயிலாக மாற்றி ஆட்கொண்ட சினம் தணிந்து, மயில் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன், சர்வ அலங்காரத்தில் சுப்ரமணியர் அருள்பாலித்தார். ஆட்டையாம்பட்டி சுப்ரமணியர் கோவிலில், திருக்கல்யாண உற்சவத்துக்கு பதில், மூலவர், உற்சவர் வள்ளி, தெய்வானை விக்கிரகங்களுக்கு, சிறப்பு அபி ?ஷகம், சந்தனகாப்பு, ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, அறுபடை வீடு பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சியளித்தார்.