பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
அரூர்: அரூர், மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள, வாணீஸ்வரி அம்பாள் உடனுறை வாணீஸ்வரர் கோவிலில், நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், காலை, 8:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜைகள், மஹாகணபதி ஹோமம், சுவாமி அம்பாள், பரிவார தேவதா ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 1:00 மணி வரை, சுவாமி அம்பாள் பரிவார அபிஷேகங்கள், சங்காபிஷேகம், வருஷாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.