பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், இன்று நடைபெற இருந்த கடை ஞாயிறு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில், இரு நாட்கள் நடை சாற்றப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கடை ஞாயிறு திருவிழா நடைபெறும்.இதில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த, மாவிளக்கு எடுத்து, கோவிலை சுற்றி வந்து, சுவாமியை தரிசனம் செய்வர். இதில் பங்கேற்க, சுற்று வட்டார மக்கள் பலர் வருவர்.இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால், வைரஸ் தொற்று தடுக்கும் வகையில், இந்த ஆண்டு, கடை ஞாயிறு திருவிழா ரத்து செய்யப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க, இன்றும், நாளையும், நடை சாற்றப்படுவதாகவும், வழக்கமான நித்ய பூஜைகள் நடைபெறும் எனவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.