தேவகோட்டை : தேவகோட்டை கவிஞர்அருசோமசுந்தரன் 27 ஆண்டுகளாக இல்ல வளாக அரங்கில் ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.இவர் சொந்த இடத்தில் ராமாயண ராமர் கோயில் கட்ட முடிவு செய்து அதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. கோயில் நிறுவனர் அருசோமசுந்தரன் வரவேற்றார். ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன் பூமி பூஜையை துவக்கி வைத்தார். தொடர்ந்து சண்முகநாத ஸ்தபதி வாஸ்து பூஜை செய்தார். அருணாசலம் நன்றி கூறினார்.