அவிநாசி: அவிநாசி, சேவூர் குட்டகம் அருகே உள்ள கூழேகவுண்டன்புதூரில், மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற, மீனாட்சி சமேத மொக்கனீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு, 108 சங்காபிஷேக ஸ்ரீ ருத்ர ஹோமமும், கூட்டு வழிபாடும் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.