ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மூடி கிடக்கும் தீர்த்தங்கள் மற்றும் யாத்ரி நிவாஸ் விடுதியை திறக்க கோரி முதல்வருக்கு ஹிந்து தேசிய கட்சி செயலர் ஹரிதாஸ் மனு அனுப்பினார்.
முதல்வருக்கு ஹிந்து தேசிய கட்சி மாநில செயலர் ஹரிதாஸ் அனுப்பிய மனுவில், மார்ச் 24 க்குபின் செப்.,1ல் ஊரடங்குதளர்த்தி அனைத்து கோயிலும் திறந்த நிலையில், தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில்வட, தென் மாநில பக்தர்கள், புனித நீராடி தரிசிப்பதே ஐதீகம். ஆனால் இக்கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தத்தில் நீராட பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் 243 நாளாக தீர்த்தங்கள் மூடி கிடப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்வதால், பக்தர்கள் வருகையும் குறைந்தது. இதன் மூலம் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், புரோகிதர்கள், நடைபாதை வியாபாரிகள் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.மேலும் கோயில் சுற்றியுள்ள நுாறுக்கு மேலான லாட்ஜ்கள், ஓட்டல்கள் மூடியே கிடப்பதால் வணிகர்கள் கடனில் சிக்கியுள்ளனர். மக்கள் நலன் கருதி தீர்த்தங்களை திறந்து, ரூ.29 கோடியில் அமைத்த யாத்ரி நிவாஸ் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.