* பகலும், இரவும் போல இன்பமும், துன்பமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும். * உணவை வீணாக்காமல் இருப்பது அன்னதானத்திற்கு சமம். * ஆணவம் துளியளவு இருந்தாலும் கடவுளை அடைய விடாமல் நம்மை தடுக்கும். * அறிவுள்ளவர்கள் அடக்கமுடன் இருப்பர். இல்லாதவரே அலட்டிக் கொள்வர். * சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினம். * பொருள் வேண்டி வழிபடுவதை விட, கடவுளின் அருள் வேண்டி வழிபடுவது சிறந்தது. * பிறர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதையே நாமும் செய்ய வேண்டும். * அறிவும் மானமும் பங்காளிகள். ஒன்றை ஒன்று எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும். * அன்பு என்னும் துளிரில் இருந்து சேவை என்னும் மொட்டு வளர்ந்து பக்தியாக மலர்கிறது. * அன்பு என்னும் விளக்கு அணைந்தால் பொறாமை என்னும் இருள் சூழும். * கடவுளை அடைய மிக எளிய வழி பிறர் மீது அன்பு செலுத்துவதே. * பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை. * ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார். அவரை விட்டு உயிர் வாழ முடியாது. * பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுள் நாமமே இன்பம். * கடவுளை நினைக்கும் மனம் தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது. * கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல. நல்ல குணங்களை கற்பதே. * பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான். * யாசகம் கேட்பதை விட இல்லை என மறுப்பவன் இழிந்தவன். * கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நியாயமான பிரார்த்தனை. * சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மகிழ்ச்சிக்கான வழி. * எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகும். * பிறரது கருத்துக்கு மதிப்பளியுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். * பூமிக்கு வரும் போது எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது கொண்டு போவதுமில்லை. * கடவுள் வாழும் வீடாக உடலைக் கருதுங்கள். அதை துாய்மையுடன் வைத்திருங்கள். * அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது. * பட்டம், பதவிக்காக அலையாதீர்கள். அது தானாகவே தேடி வர வேண்டும். * இயற்கை அழகில் ஈடுபடுங்கள். அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள். * கடவுளை ஆராயக் கூடாது. நம்பிக்கை, ஆழ்ந்த அன்பு இருந்தால் அவரை அடையலாம். * எங்கும் நிறைந்த தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.