திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், கும்பபூஜை, அபிஷேகம், கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. வரசித்தி விநாயகருக்கும், விமான கலசத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. வருஷாபிஷேகத்தை சங்கர் வாத்தியார் நடத்தினார். மணிடிரேடர்ஸ் சங்கரசுப்பிரமணியன், தமிழ்நாடு பிராமண சங்க நெல்லை கிளைத்தலைவர் கயிலை கண்ணன், வெங்கடாச்சலம், மணிமுதலியார், ராமச்சந்திரராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.