சிவகிரி : சிவகிரி அருகேயுள்ள துரைச்சாமியாபுரம் கெங்காபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. சிவகிரி அருகேயுள்ள துரைச்சாமியாபுரம் கெங்காபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. அன்று இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு நடந்தது. 25ம் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு பால், பழம், பன்னீர், எலுமிச்சை உட்பட 18 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இரவு 1.30 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. 26ம் தேதி மாலை 5 மணிக்கு மாவிளக்கு ஏற்றுதல், பாரிவேட்டை நடந்தது. 5.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. ஒவ்வொரு நாளும் புஷ்ப அலங்காரம், அம்மன் வீதிஉலா, யானை ஊர்வலம், வாணவேடிக்கை செண்டா மேளம் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.