செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில், கருடசேவை உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பிரதான உற்சவமான கருடசேவை உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. காலை 6 மணிக்கு, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். இரவு ஹனுமந்த வாகனத்தில் உலா வந்தார். வரும் 31ம் தேதி, திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.