Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ... பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 23 பங்குனி விழா காப்பு கட்டுதல் பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

10 மார்
2026
11:03

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன், முருகபெருமான் அருள்பாலிக்கிறார். வல்லாசுரன் மாண்டு விழுந்த இடத்தில் ஆண்டுதோறும் தோட்ட உத்சவம் நடத்தப்படும். அதன்படி, 2013ம் ஆண்டு கடைசியாக தோட்ட உத்சவம் நடந்தது. இதையடுத்து, 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது. தோட்ட உத்சவத்தையொட்டி, நேற்று காலை 4:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் கோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு கோடை ஆண்டவர் சப்பரத்தில் எழுந்தருளி வல்லாசுரன் விழுந்த தோட்டத்திற்கு வந்தடைந்தார். மாலை 4:00 மணிக்கு கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின், கோடையாண்டவர் அங்கிருந்து புறப்பட்டு வல்லக்கோட்டை கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar