பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மார்ச் 23 பங்குனி விழா காப்பு கட்டுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 11:03
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 23 காப்பு கட்டுடன் துவங்குகிறது. இதனை ஒட்டி மார்ச் 13 அன்று பூச்சொரிதல் விழா நடக்க உள்ளது. கோயிலில் மார்ச் 24 காலை 10:30 மணிக்கு சிங்க கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கும். அன்று இரவு பூதகி வாகனத்தில் அம்மன் உலா வருவார். தினமும் காமதேனு, ரிஷபம், குதிரை வாகனங்களில் உலா வந்து அருள் பாலிக்க உள்ளார். மார்ச் 27 வண்டி மாகாளி உற்சவம் நடக்கிறது. ஏப். 1 அன்று அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் மற்றும் இரவு மின் தீப அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் வலம் வருவார். மறுநாள் காலை கொடி இறக்கம் நடக்கிறது. மேலும் ஏப். 3 ல் அதிகாலை 4:00 மணி துவங்கி வைகை ஆற்றில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பின்னர் அபிஷேகம் ஆராதனைகளும் இரவு சயன கோலத்தில் அம்மன் வீதிவலம் வருவார். அனைத்து நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் செய்கின்றனர்.