திருப்பரங்குன்றம்: ருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள பெரிய நந்திக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காசி விஸ்வநாதர், தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான், மலைமேலுள்ள காசி விஸ்வநாதர், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், கல்களம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.