பதிவு செய்த நாள்
28
நவ
2020
05:11
உடுமலை: உடுமலை, குட்டைத்திடல், சித்தி, புத்தி விநாயகர் கோவில், புதுப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு, முன் கும்பாபிேஷகம் நடந்தது. கோவிலில், மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை, 6:30 மணியிலிருந்து, 8:30 மணி வரை, கோமாதா வழிபாடு, குபேர பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, புண்ணிய தீர்த்தங்கள் வழிபாடு நடந்தது.காலை 10:00 மணிக்கு, மூலவர் அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மதியம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.