பதிவு செய்த நாள்
28
நவ
2020
05:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி விநாயகர், முருகப்பெருமான், அம்மணீஸ்வரர், நவகிரகங்கள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில், மும்மூர்த்திகள் உருவ வழிபாடும் கோவிலில் சிறப்பம்சமாக உள்ளது.இந்த கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த, 25ம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, இரண்டு கால வேள்வி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நேற்றுமுன்தினம் காலை, மூன்றாம் கால வேள்வியும், இறை சக்திகளை எண் வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி உள்ளிட்ட பூஜைகளும்; காலை 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் திருக்குடங்கள் உலா, கும்பாபிேஷக விழா நடைபெற்றது.பரம்பரை அர்ச்சகர் கண்ணப்பர் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு மகா அபிேஷகம், தச தரிசனமும் நடந்தது.