Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: ... சபரிமலையில் கூடுதல் பக்தர்கள்: விரைவில் துவங்குது முன்பதிவு சபரிமலையில் கூடுதல் பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
எழுத்தின் அளவு:
திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு

பதிவு செய்த நாள்

29 நவ
2020
04:11

திருமலை: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி, திருமலை அன்னமய பவனில், நேற்று மாலை அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், பல முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கூட்ட நிறைவுக்கு பின், சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதன் முறையாக, வைகுண்ட ஏகாதசியின் போது, 10 நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக மடாதிபதிகள், பீடாதிபதிகளுடன் கூடிய கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, அதில் முடிவு செய்யப்பட்டு, அறங்காவலர்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரும், 25 முதல், தொடர்ந்து, 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்து வைக்கப்பட உள்ளது.

திருமலை தேவஸ்தானத்திடம் உள்ள அசையாத சொத்துக்கள் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தேவஸ்தானத்தின் சொத்துக்கள் விற்கப்படுவதை தடுக்க, தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை தேவஸ்தானத்திடம், 1,128 சொத்துகள் உள்ளன; 8088.89 ஏக்கர் நிலம் உள்ளது. தமிழகத்தில், உளூந்துார் பேட்டையில், அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, 4 ஏக்கர் நிலம் மற்றும் அதில் ஏழுமலையான் கோவில் கட்ட, 10 கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். அதனால் அங்கு ஏழுமலையான் கோவில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், டிச., 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar