பழநி : பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.மதியம் 12:00 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோயிலில் செல்ல குடமுழுக்கு மண்டபம் வழியே காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல்மழை பெய்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை கடைபிடிக்க கிரிவீதியில் பக்தர்களை போலீசார் நிறுத்தி வைத்து சிறிது நேரத்திற்கு பின் அனுப்பினர்.