பதிவு செய்த நாள்
30
நவ
2020
01:11
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் கிருஷ்ணா நகர், சூரியனார் கோவிலில், கிருத்திகா மண்டல வே தபாராயணம் நடந்தது. புதுச்சேரி தர்ம சம்ரக்ஷணசமிதி சார்பில், கடந்த 16ம் தே தி முதல், தினம் ஒரு கோவிலில் கிருத்திகா மண்டல வேதபாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. 13ம் வது நாளான நேற்று காலை , கிருஷ்ணா நகர், சூரியன் கோவிலில் வேதத்தின் சூரியநமஸ்காரம் பகுதி ஓதப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சூரிய மந்திரங்களுடன், 132 நமஸ்காரங்களை செய்தனர். இன்று 30ம் தேதி, வழுதாவூர் சாலை , கதிர்காமம் முருகன் கோவிலில் வேதபாராயணம் நடக்கிறது. வரும் 29ம் தேதி வரை தினம் ஒரு கோவிலில், இந்த வேதபாராயணம் நடத்தப்படுகிறது. வேதபாராயணம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சமிதியின் தலைவர் சீனிவாசன், செயலாளர் சீதாராமன், பொருளாளர் லட்சுமிநாராயணன், நிர்வாக பொறுப்பாளர்கள் அருணாச்சலம், ரகோ த்தமன், கார்த்திகேயன், வேதராமன் செ ய்து வருகின்றனர்.