பதிவு செய்த நாள்
30
நவ
2020
03:11
தர்மபுரி: கார்த்திகை தீப திருநாளையொட்டி, நேற்று மாலை, மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 4:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு மேல், மகா தீபம் ஏற்பட்டது. இதேபோன்று, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், அருணேஸ்வரர் கோவில், மொடக்கோரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால் வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜாம்மாள் அருணேஸ்வர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பென்னாகரம் சிவன் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று காலை, 4:30 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மேல், மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மக்கள் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீபத்தை?யொட்டி, அங்குள்ள மலைக்கோவில் உச்சியில் நேற்று, தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள, வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
* கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி ராசுவீதியிலுள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், கவீஸ்வரர் கோவில், காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல, வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தீபமேற்றி வழிபட்டனர்.