ஆண்டிபட்டி : ரெங்கசமுத்திரம் ஊராட்சி நாச்சியார்புரம் துாரிவாரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் சத்யபாமா, ருக்மணியுடன் கோபால்சுவாமி அருள்பாலிக்கிறார். தும்பிக்கையாழ்வார், செல்வகாளை சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கோபூஜை, விஸ்வ சேனை பூஜை, கணபதி ேஹாமம், கிராம தேவதை வழிபாடு நடந்தது. முளைப்பாரி அழைப்பை தொடர்ந்து முதல், 2-ம் கால யாக பூஜைகள், ஆண்டாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 3,4-ம் கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. கும்பாபி ஷேக ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி, கொண்டம்மாள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.