பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொன்மையான சுரகரேஸ்வரர் கோவில், 48 ஆண்டுகளுக்கு பின், வரும், 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது.ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு, 1972ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் நடைபெறவில்லை. இதையடுத்து, மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கிய ராஜகோபுரபணி, கடந்தாண்டு சீரமைக்கப்பட்டது.இந்நிலையில், கோவில் வளாகத்திலுள்ள பெரிய அரச மர கிளை விழுந்து, மதில் சுவர் சேதம் அடைந்தது. அதை பராமரிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்பட்டது.தற்போது, அதற்கான பணி துவங்கியுள்ளது. கோவிலில் நேற்று, கணபதி ஹோமம் துவங்கியது. வரும், 4ல் காலை, 6:00 - -7:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.