மல்லசமுத்திரம்: காளிபட்டி கந்தசாமி கோவிலில், நேற்று கார்த்திகை மகாதீபதிருநாளை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிபட்டியில் இருக்கும் பிரசித்திபெற்ற கந்தசாமி முருகன் கோவிலில், நேற்று கார்த்திகை தீபதிருநாள் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, மூலவருக்கு காலை முதல், இரவு வரை பலவகையான மூலிகை திரவியங்களை கொண்டு, அபி?ஷக ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையருடன் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.