பதிவு செய்த நாள்
07
டிச
2020
09:12
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று, கடை ஞாயிறு திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடை ஞாயிறு திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பக்தர்கள் மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து சென்று, சுவாமி தரிசனம் செய்தால், வியாதி தீரும் என்பது ஐதீகம்.இந்தாண்டு வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு உத்தரவுப்படி, திருவிழா ரத்து செய்யப்பட்டு, இரு ஞாயிற்றுகிழமைகள் கோவில் மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், இதன் விபரம் தெரியாத சுற்றுப் பகுதி மக்கள் கோவில் வெளியே தேங்காய் உடைத்து மாவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பலர் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்தனர்.கோவில் உள்ளே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து, நேற்று, கடை ஞாயிறு திருவிழாவிற்கு, கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமையும், இத்திருவிழா நடைபெறும் என, கோவில் செயல் அலுவலர் குமரன் தெரிவித்தார்.