ஆனைமலை: கோட்டூர் அடுத்த அங்கலக்குறிச்சி சமுக்தியாம்பிகை கோவிலில், பைரவ ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோட்டூர் அடுத்த அங்கலக்குறிச்சி ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் நேற்று, பைரவ ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது.மேலும், கோவில் சன்னதியிலுள்ள சமுக்தியாம்பிகை, சரபேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று, மாலை 5:30 மணிக்கு காலபைரவருக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு காலபைரவரை தரிசித்து சென்றனர்.