பைரவாஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2020 12:12
மேட்டுப்பாளையம்: பைரவாஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பைரவாஷ்டமியை முன்னிட்டு, கால பைரவர் சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 108 மூலிகைகளை கொண்டு யாக பூஜையும், வேள்வி செய்யப்பட்டன. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.