பதிவு செய்த நாள்
09
டிச
2020
10:12
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 108 விசேஷ திரவிய அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி,மகாகணபதி ஹோமத்துடன் துவங்கிபால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை உட்பட 108 விசேஷ திரவியங்கள், கனி வகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.வைபவங்களை கோவில் அர்ச்சகர் அம்பிகேஸ்வரன் குருக்கள் செய்து வைத்தார். ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.