பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி காளியம்மன் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையொட்டி 16 வகை அபிேஷகங்கள், ஆராதனை நடந்தது. ஐம்பொன் அங்கி அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் குடைமிளகாய், எலுமிச்சை, தேங்காய் தீபங்கள் ஏற்றி நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். ஜோதி லிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது. கொங்குவார்பட்டி முக்கிய பிரான ஆஞ்சநேயர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.