கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது.அண்ணாநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட தலைவர் முரளிதர அய்யர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் வரவேற்றார். தொடர்ந்து ஐயப்பன் சாமிக்கு சிறப்புஅலங்காரம் செய்து, 18 படி வைத்து பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.கவுரவ தலைவர் தங்கவேல், பொருளாளர் பழனி, அலுவலகசெயலாளர் மலர்வண்ணன், மாநில செயற்குழு சிகாமணிராஜன், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். பிரபு நன்றி கூறினார்.