பதிவு செய்த நாள்
09
டிச
2020
03:12
புதுச்சேரி : சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டி கோவிலில் மகா யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் 27ம் தேதியன்று நடக்க உள்ள சனி பெயர்ச்சியை முன்னிட்டு, முதல் நாள் 26ம் தேதியன்று மகா யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, வரும் 26ம் தேதியன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு 1000 லிட்டர் நல்லெண்ணெய்யால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மறுநாள் 27ம் தேதி அதிகாலை 5:22 மணிக்கு, சனி பெயர்ச்சி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.