ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலின் பின்புறத்தில் பஸ்மக்குளம் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதைப்போன்று, இங்கும் நேற்று பஸ்மக்குளத்தின் படித்துறையில் சிறப்பு பூஜை நடந்தது. படிகளில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டு குளத்தில் மலர் துாவியதும் சரண கோஷத்தை பக்தர்கள் முழங்கினர். பூஜையை மோகன்சாமி செய்தார். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் சேவைநிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.