திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை நடந்து வருகிறது. அதில், முக்கிய நிகழ்ச்சியான சுவாமிக்கு ஆறாட்டு உற்வசம், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று நடந்தது. நெய், பன்னீர், விபூதி மற்றும் மஞ்சள் உட்பட பல திரவியங்களில், அபிேஷகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி.