புதுச்சேரி; இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ஷேத்திரபால பைரவர் சுவாமிக்கு, ஜென்மாஷ்டமி அஷ்ட பைரவர் மகா யாகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் பைரவர் அவதரித்த நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது.இதனையொட்டி, அன்று மாலை 4:00 மணிக்கு அஷ்ட பைரவர் பூஜை, சங்கு பூஜை ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், கலசாபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.