பதிவு செய்த நாள்
11
டிச
2020
03:12
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், குபேர கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர்சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில், கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம், சிவராத்திரி நாளில், குபேரன் கிரிவலம் செல்வ தாகவும், அப்போது, கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதாகவும், அன்று கிரிவலம் சென்றால், செல்வம் பெருகும் என்பதும், பக்தர்களின் நம்பிக்கை.கொரோனா ஊரடங்கால், வரும், 13ம் தேதி, குபேர கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.