பாதுகாப்பு பிரிவு சிறப்பு எஸ்.பி., கோவில்களில் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2020 03:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கோவில்களில் பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி., சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 11:00 மணிக்கு வருகை தந்த பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி., எஸ்.பி., சுரேஷ்குமார் கோவிலில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து டி.எஸ்.பி., ராஜூ, தாசில்தார் சிவச்சங்கரன், இந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், செயல் அலுவலர் அருள் மற்றும் தனிப்பிரிவு போலீசாரிடம் பாதுகாப்பை பலப்படுத்தும் முறைகள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வது குறித்து எடுத்துரைத்தார். மாலை 3:00 மணிக்கு உலகளந்த பெருமாள் கோவிலில் ஆய்வு செய்து அதேபோல் கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இன்று திருவரங்கத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.