பதிவு செய்த நாள்
11
டிச
2020
03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், 91 லட்சத்து, 94 ஆயிரத்து, 508 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மாதம், 20ல் கொடியேற்றம் நடத்தப்பட்டு, 29ல், மகா தீப விழா நடந்தது. கொரோனா ஊரடங்கால், மகா தீப திருவிழா நடந்த, 29, மற்றும் மறுநாள், 30ல், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீப திருவிழா மற்றும் பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், கடந்த ஒரு மாதத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்கள், 91 லட்சத்து, 94 ஆயிரத்து, 508 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 254 கிராம் தங்கம், 543 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் செலுத்தியிருந்தனர். கடந்தாண்டு, தீப திருவிழாவில், 2 கோடியே, 25 லட்சத்து, 62 ஆயிரத்து, 155 ரூபாய், 292 கிராம் தங்கம், 2,684 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பக்தர்கள் வருகை குறைவால், கடந்த ஆண்டை விட ஒரு கோடியே, 33 லட்சத்து, 67 ஆயிரத்து, 647 ரூபாய், இந்த ஆண்டு உண்டியல் காணிக்கை குறைந்திருந்தது.