அலங்காநல்லுார் : அலங்கா நல்லுார் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்ஸவ விழாவில் அலங்காரத்தில் விளக்கு நாச்சியார் அருள்பாலித்தார்.
அலங்காநல்லுார் தெப்பக்குளம் சித்தி விநாயகர், சீனிவாச பெருமாள், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. கணபதி ஹோமம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கால பைரவர், ஆஞ்சநேயர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.