கோவை:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் வேகமாக நிறைவடைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்னிறுத்தி, அகோரிகள், சாதுக்கள் நாடு முழுக்க மேற்கொண்ட பயணத்தில் கோவையை வந்தடைந்தனர்.ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் மற்றும் கும்பமேளா விரைவில் நடப்பதற்கு அயோத்தியில் இருந்து அகோரிகள் மற்றும் சன்னியாசிகள் நாடு முழுக்க உள்ள, முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.தமிழக - கேரளா எல்லையான வாளையாறு, க.க.சாவடி வழியாக நேற்று இரவு 7:00 மணிக்கு கோவை நகருக்கு வந்தனர். கோவை வந்த சாதுக்கள், அகோரிகளுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நாமசங்கீர்த்த இசைக்குழுவோடு சென்று மாலையணிவித்து மரியாதை செய்தார்.அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:கேரள மாநிலம், குருவாயூரில் வழிபாட்டை நிறைவு செய்து, கோவைக்கு வருகை தந்துள்ளனர். நாளை (இன்று) வெள்ளிங்கிரி மலைப்பயணம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, பண்ணாரி சென்று அங்கிருந்து சாம்ராஜ்நகர் செல்கின்றனர்.நாடு முழுக்க சனதான தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சனாதான தர்மம் குறித்து தவறான புரிதல்களை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.