பதிவு செய்த நாள்
11
டிச
2020
04:12
மதுரை:மேல்மருவத்துார் இருமுடி தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகள் வசதிக்காக சில சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
2021 ஜன., 28 வரை மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் (06238), செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில்(02661), டிச., 11 முதல் 2021 ஜன., 29 வரை சென்னை -மதுரை வைகை ரயில்கள்(02635/02636), சென்னை - மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் (02637), சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில்(02661), டிச., 11 முதல் 2021 ஜன., 22 வரை நாகர்கோவில் -சென்னை சிறப்பு ரயில்(06064), டிச., 17 முதல் 2021 ஜன., 28 வரை சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்(06063), டிச., 16 முதல் 2021 ஜன., 25 வரை டில்லி நிஜாமுதீன் -கன்னியாகுமரி சிறப்பு ரயில்(06011), டிச., 12 முதல் 2021 ஜன., 25 வரை டில்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்(06012) ஆகியவை மேல்மருவத்துார் ஸ்டேஷனில் நின்று செல்லும்.
மான்டுயாடிஹ் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (05119) டிச.,15, 22 ஆகிய நாட்களிலும், ராமேஸ்வரம்-- மான்டுயாடிஹ் சிறப்பு ரயில்(05120) டிச., 16, 23, 30 ஆகிய நாட்களிலும், ராமேஸ்வரம் - புவனேஸ்வர் சிறப்பு ரயில்(08495) டிச.,13, 20, 27 நாட்களிலும், புவனேஸ்வர் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில்(08496) டிச.,11, 18, 25 ஆகிய நாட்களிலும் மேல்மருவத்துாரில் நின்று செல்லும்.