நாகர்கோவில்:பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நேற்று வலியபடுக்கை பூஜை (மகாபூஜை) நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில். பெண்கள் இருமுடி கட்டு எடுத்து வந்து கடலில் குளித்து வழிபாடு நடத்துவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய பூஜையான வலிய படுக்கை. மாசி கொடை விழாவின் ஆறாவது நாள், பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளி என ஆண்டுக்கு மூன்று நாட்கள் நடைபெறும். கார்த்திகை கடைசி வெள்ளியான நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:30-க்கு பஞ்சாபிஷேகம் நடந்தது. 6:30-க்கு உஷபூஜை, 12:00 மணிக்கு உச்சபூஜை , மாலை 6:0௦ மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, இரவு 8:30 மணிக்கு அத்தாழ பூஜை நடந்தது. அதன் பின்னர் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் உலா வருதல் நடந்தது. தொடர்ந்து வலிய படுக்கை பூஜை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.