பதிவு செய்த நாள்
12
டிச
2020
02:12
ஈரோடு: அந்தியூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, எலும்புகள், ஈரோடு அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து, ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: அந்தியூர் அருகே பட்லூர், மொசக்கவுண்டன் பாளையத்தில், வாய்க்கால் பாலம் கட்டுமான பணிக்கு, குழி தோண்டியபோது, 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி எனப்படும், இரண்டு பானைகள் கிடைத்தன. ஆனால், முழுமையாக இல்லை. பொக்லைன் இயந்திரத்தை கொண்டு தோண்டியதால் உடைந்து விட்டன. இரண்டடி உயரம், 23 இஞ்ச் விட்டம் கொண்ட பானைக்குள், மனித எலும்புகள் இருந்தன. ஒரு பானையில் மண்டை ஓட்டுடன் எலும்பும், மற்றொன்றில் தலையில்லா எலும்பு மட்டும் இருந்தது. இவை சுத்தம் செய்து, காட்சிப்படுத்தப்படும். அதற்கு முன், எலும்புகள், ஆணா, பெண்ணா, என கண்டறியவும், புதைக்கப்பட்ட சரியான காலம், குறித்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே, பட்லூர் பகுதியில் கற்கால இரும்பு ஆயுதங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.