பதிவு செய்த நாள்
12
டிச
2020
02:12
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல்களில், பக்தர்களின் காணிக்கையாக, 66.65 லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது.திருப்போரூர் அறுபடை வீட்டிற்கு நிகரான கந்த சுவாமி கோவிலுக்கு, சென்னை, செங்கல்பட்டு உட்பட பல பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், தினமும் வருகின்றனர்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இக்கோவில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்படுகின்றது. கொரோனா தொற்று காரணமாக, எட்டு மாதங்களாக உண்டியல் திறக்கப்படவில்லை.இங்குள்ள, 12 உண்டியல்களில், ஒரு உண்டியல் மட்டும், நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகா தேவி, கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முன்னிலையில், தன்னார்வ குழுவினர், கோவில் பணியாளர்கள் காணிக்கையை எண்ணினர்.அதில், 66.65 லட்சம் ரூபாய், 668 கிராம் தங்கம், 4,900 கிராம் வெள்ளி கிடைத்தன.