பதிவு செய்த நாள்
12
டிச
2020
02:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
பொள்ளாச்சி, காட்டம்பட்டிபுதுாரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள், ஆஞ்சநேயசுவாமி கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில், சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் பசும்பொன்னால் வடிவமைக்கப்பட்டு, கோவிலில் நேற்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து உற்சவர்களுக்கு, 16 வகை திருமஞ்சன அலங்கார வழிபாடு நடந்தது.நேற்று காலை, 9:00 மணிக்கு, கோவில் பிரகாரத்தில், அமைக்கப்பட்ட ஊஞ்சலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம், பக்தர்களின் வாழ்த்தொலியுடன் நடந்தது.உற்சவர்களின் திருவீதி உலா, காட்டம்பட்டிபுதுார் வீதிகளில் நடந்தது. முன்னதாக பஜனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.