பதிவு செய்த நாள்
12
டிச
2020
03:12
திருப்பூர்: பூச்சாட்டு பொங்கல் விழாவின் போது, கோவிலுக்குள் வெள்ளை நாகம் தென்பட்டதால், பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். திருப்பூர், பெரியாண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.
பொங்கல் விழா, மாவிளக்கு ஊர்வலம், தேர் இழுத்தல், மஞ்சள் நீர் விழாவை தொடர்ந்து, நேற்று மறுபூஜையுடன் விழா நிறைவு பெற்றது.பூச்சாட்டு பொங்கல் விழா அன்று, சின்னாண்டிபாளையத்தில் இருந்து அலகு குத்தி தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த பேரிகார்டு மீது, ஐந்து அடி நீளமுள்ள வெள்ளை நாகம் ஒன்று நெளிந்ததை பார்த்து, பெண்கள் பதறியடித்து விலகி சென்றனர். கீழே இறங்கிய வெள்ளை நாகம், வாசலில் இருந்த சிறிய தேரை நோக்கி சென்று, அதன்பின், வெளியேறியது. அதன்பின்னரே, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.