பதிவு செய்த நாள்
12
டிச
2020
02:12
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.ஸ்ரீஐயப்பன் கோவிலில், 61வது ஆண்டு மண்டல பூஜை விழா, விமரிசையாக நடந்தது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.விழாவின் ஒரு பகுதியாக, நேற்று, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பஜனை மண்டபத்தில், பெரிய குத்துவிளக்கு ஒன்றை, அம்மனாக பாவித்து சிறப்பு வழிபாடு செய்து, திருவிளக்கு பூஜை துவங்கியது.தலை வாழை இலையின் மீது குத்துவிளக்குகளை அலங்கரித்து வைத்து, ஜோதி வழிபாட்டுடன் தீபம் ஏற்றினர். தொடர்ந்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்குவைத்து வழிபட்டனர். தீப, துாபம் செய்து, விநாயகர், அம்மன், சிவன், விஷ்ணு, முருகன், ஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் மீது பஜனை பாடி வழிபட்டனர்.