திருவாவடுதுறையில் மெய்கண்டார் சுவாதி குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2020 02:12
மயிலாடுதுறை : மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றம் ஆகியவற்றின் சார்பில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவாவடுதுறை அருள்மிகு கோமுதீக்ஸ்வரர் திருக்கோயிலில் சந்தான குரவர்களில் முதல்வரான ஸ்ரீ மெய்கண்டாரின் கார்த்திகை சுவாதி குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி இன்று ஸ்ரீ மெய்கண்டாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபூஜை விழாவில் கோயில் கண்காணிப்பாளர் சண்முகம் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.