பதிவு செய்த நாள்
13
டிச
2020
02:12
திருப்பதி: திருமலையில், மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, தேவஸ்தானம் நீக்கியுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா விதிமுறைகள் காரணமாக, 12 - 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி, தேவஸ்தான நிர்வாகத்துக்கு, பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து ஆலோசனை நடத்திய அதிகாரிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கும் தரிசன அனுமதி வழங்கிஉள்ளது. ஆனால், அவர்களுக்கு என சிறப்பு தரிசன வசதி எதுவும் அளிக்கப்படாது. விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, தங்களின் சுய விருப்பத்துடன் அவர்கள் திருமலைக்கு வரவேண்டும்.கடந்த மார்ச்சுக்குப் பின், தற்போது தான், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது.